தேவையான பொருட்கள்
கோதுமை மாவு (வறுத்தது) - 4 கப்
உளுத்தம் மாவு (வறுத்தது) - கால் கப்
தண்ணீர் (கொதித்தது) - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு (விரும்பினால்)
செய்முறை
1) தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2) ஒரு பாத்திரத்தில் வறுத்த உளுத்தம் மாவு, வறுத்த கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்துக் கொண்டு அதில் சிறிது சிறிதாக கொதிநீரை தெளித்து பிசையவும்.
3) பிசைந்த மாவை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்றி எடுத்து விடவும்.
4) மாவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
5) கலந்து வைத்திருக்கும் புட்டு மாவை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்
சத்தான கோதுமை- உளுத்தம் மாவு புட்டு தயார்
கீர்த்தனா சிந்தனைகள் :
TVக்கு ரிமோட் கண்டுபிடுச்சது வேணும்னா வெளிநாட்டுகாரனா இருக்கலாம்...
ஆனா அத பின்னாடி தட்டுனா நல்லா வேலசெயும்னு கண்டுபிடிச்சது நம்மூர்காரன்தான்.