மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

சிரியா படுகொலையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

சிரியா படுகொலையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

சிரியா இனப் படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை பல்லாவரம் பேருந்து நிலையத்தில் நேற்று (மார்ச் 4) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்திவருகின்றனர். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களும், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சிரியாவில் நடைபெறும் இனப்படுகொலையைக் கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை பல்லாவரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிரியாவில் நடக்கும் இனப்படுகொலையானது அமெரிக்க, ரஷ்ய அதிகாரப் பசிக்காக அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்படும் மனித விரோத தாக்குதல்கள் என்றும், உடனே ஐ.நா. கவுன்சில் இந்தப் போரில் தலையிட்டு நடவடிக்கை காண வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திங்கள், 5 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon