மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

பெரம்பலூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போன் பரிசு திட்டம் நடைபெற்றது.

பபாசியும் பெரம்பலூர் மக்கள் மன்றமும் இணைந்து பெரம்பலூரில் புத்தக கண்காட்சியை பிப்ரவரி 16ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. 96 அரங்குகளில் வைக்கப்பட்ட ஏராளமான புத்தகங்களை ஆயிரக்கணக்கான வாசகர்கள் பார்த்து வாங்கிச் சென்றனர்.

அரங்கு எண் 26ல் வைக்கப்பட்ட மின்னம்பலம் பதிப்பக புத்தகங்களை ஏராளமான வாசகர்கள் வாங்கிச் சென்றனர். ஒவ்வொரு நாளும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருகை தந்தனர். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் பலரும் நமது அரங்கிற்கு வருகை தந்து தங்களை மின்னம்பலம் வாசகர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மின்னம்பலம் பற்றிய தங்களது பார்வையை பகிர்ந்து கொண்டனர். கும்பகோணம் மாவட்ட நீதிபதி திரு. செம்மல் பார்வையிட்டு நமது பதிப்பக புத்தகங்களை வாங்கிச் சென்றார்.

(கும்பகோணம் மாவட்ட நீதிபதி திரு செம்மலுடன் நமது மின்னம்பலம் மெய்ப்பு நோக்குநர் திரு.வேல் முருகன்)

இந்த கண்காட்சியிலும் மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஸ்மார்ட்போன் பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பரிசு குலுக்கலில் ஆத்தூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறையில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றும் என்.பி.செந்தில் குமார் ஸ்மார்ட் போன் பரிசினை தட்டிச் சென்றார். ராம் இன் (Ram Inn) தொழில்நிறுவனங்களின் உரிமையாளர் திரு. சந்திரசேகர் அவருக்கு பரிசினை வழங்கி கௌரவித்தார். எளம்பலூர், முன்னாள் ஊராட்சி தலைவரும் தொழிலதிபருமான திரு ராமசாமி அவர்கள் இப்பரிசினை வழங்கியுள்ளார்.

செவ்வாய், 27 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon