மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: மோர்கெல்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: மோர்கெல்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வரும் மோர்னே மோர்கெல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்துள்ளார். தென்னாப்பிரிக்க மைதானத்தில் அவரது வேகப்பந்து வீச்சினை தாக்குப்பிடிக்க முடியாமல் பல்வேறு நாட்டு வீரர்களும் திணறி உள்ளனர். சமீபத்தில் இந்திய அணி வீரர்களும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக அவரது பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். அவர் இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுளை வீழ்த்தி உள்ளார். அதேபோல் 117 ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்டுக்களையும், 44 சர்வதேச டி-20 போட்டிகளில் 47 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான், டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி உள்ள மோர்கெல் 2012ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றவர். 33 வயதான மோர்கெல் நேற்று (பிப்ரவரி 26) தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட உள்ள தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது "ஓய்வு குறித்து முடிவெடுப்பது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் இதுவே ஓய்வு பெற சரியான நேரம் என நினைக்கிறேன். எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். சர்வதேச போட்டிகளால் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே இனி குடும்பத்தின் நலனுக்காக புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

மோர்னே மோர்கெல் ஓய்வு பெறுவது தென்னாப்பிரிக்க அணிக்கு மிகப்பெரும் இழப்பு என்று தான் கூறவேண்டும்.

செவ்வாய், 27 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon