மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

கோயம்பேட்டில் காய்கறி விலை சரிவு!

கோயம்பேட்டில் காய்கறி விலை சரிவு!

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறிச் சந்தையில் பல்வேறு காய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி லோடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், விற்பனை அதிகரிக்காமல் வழக்கம்போலவே இருக்கிறது. ஆனால், காய்கறிகளின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே இதே போக்கு நீடிக்கிறது. பிப்ரவரி 25ஆம் தேதி (ஞாயிறு) முட்டைக்கோஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.3க்கு விற்பனையாகிறது. சென்ற வாரம் இதன் விலை 4 ரூபாயாக இருந்தது. பீட்ரூட் விலை 7 ரூபாயிலிருந்து 4 ரூபாயாகக் குறைந்துள்ளது. புடலங்காய் விலையும் 10 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதர காய்கறிகளின் விலை நிலவரம்:

தக்காளி ரூ.7, சாம்பார் வெங்காயம் ரூ.22, பெரிய வெங்காயம் ரூ.22, கத்தரிக்காய் ரூ.13, உருளைக் கிழங்கு ரூ.13, பீன்ஸ் ரூ.15, வெண்டைக் காய் ரூ.15, முள்ளங்கி ரூ.6, கேரட் ரூ.10, முருங்கைக் காய் ரூ.40, மிளகாய் ரூ.13 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. காய்கறிகளின் விலை சீராவதற்கு இன்னும் ஒரு மாதமாவது ஆகும் என்று காய்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளது.

திங்கள், 26 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon