மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 பிப் 2018

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -2

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -2

இராமானுஜம்

சென்னை மாகாணமாக இருந்தபோது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் உருவான திரைப்படங்களின் தலைநகரமாகச் சென்னை விளங்கியது. தமிழகத்தில் சுமார் 3,500 திரையரங்குகள் இருந்தன. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின் தமிழகத்தில் திரையரங்குகள் குறைந்தன. தமிழ்த் திரைப்படங்களை வியாபாரம் செய்ய, தமிழகம் 9 பகுதிகளாக சென்னை நகரம், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என 9 பகுதிகளாக வரையறுக்கப்பட்டது.

செங்கல்பட்டு, கோவை, மதுரை ஆகிய ஏரியாக்களுக்கு படங்கள் வியாபாரம் செய்யப்படுவதை வைத்து பிற ஏரியாக்களின் விலை தீர்மானிக்கப்படும். விலையை பொறுத்து எத்தனை சென்டர், தியேட்டர் என்பது தீர்மானிக்கப்படும். சென்னை நகரத்தில் 1999வரை ஐந்து தியேட்டர்களில் மட்டுமே புதிய படங்கள் ரீலீஸ் செய்யப்படும். படங்கள் ரீலீஸ் தியேட்டர்களுக்கு பொது மக்கள் மத்தியில் தனி மரியாதை இருந்தது. அதனால் தியேட்டர் பராமரிப்பு, படம் ஓட்டப் பயன்படுத்தபடும் புரொஜக்டரின் தரம் ஆகியவற்றைக் கதாநாயகன், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் விசாரித்து உறுதி செய்த பின்னரே புதிய படங்களைத் திரையிட ஒப்பந்தம் செய்வார்கள். இதே நடைமுறை தமிழ் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

தியேட்டர் என்றால் அடிப்படையாகச் சில வசதிகள் சொந்தமாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிற பொதுவான விதி அன்றைய சினிமா தியேட்டர்களில் கடைபிடிக்கப்பட்டது. அதனால் வருடம் முழுவதும் சினிமா தியேட்டர் வசூல் வளமாக இருந்தது. விநியோகஸ்தர்கள் செழிப்பாக இருந்தார்கள். தயாரிப்பாளர்கள் கந்து வட்டி கஷ்டம் இல்லாமல் படத் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டார்கள்.

முன்னணி நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள் வருடத்திற்கு குறைந்த பட்சம் 4 படங்கள் நடித்தனர். இதனால் ஆண்டு முழுவதும் இவர்கள் நடித்த படங்கள் தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருந்தன. சரி டிஜிட்டல் சினிமாவுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?

ஒரு திரையரங்கம் என்பது எப்படி இருக்கைகள், கழிப்பறை, வாகன நிறுத்தம் போன்ற வசதிகளை உள்ளடக்கியதோ அதேபோல் புரொஜக்டர் வசதியும் அதனுள்ளயே அடங்கும்படி இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த தியேட்டரில் தங்கள் படங்களை திரையிடக் கூடாது என்பது எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரின் எழுதப்படாத சட்டமாக அமலில் இருந்தது. எனவே, திரையரங்கு உரிமையாளர்கள் சுயமரியாதையுடன் தொழில் செய்தார்கள். டிஜிட்டல் உள்ளே வந்தபோது சுயமரியாதையும், சொத்துரிமையும் தங்களிடமிருந்து மறைமுகமாக அபகரிக்கப்படுவதை அறியாமலேயே டிஜிட்டல் நிறுவனங்களிடம் அடிமைப்பட்டன திரையரங்குகள்.

(திங்கள்கிழமை: புரொஜக்டரால் ஏற்பட்ட நன்மை - டிஜிட்டலால் கிடைத்த நன்மை!)

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 24 பிப் 2018