மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

தேயிலை விலையுயர்வு விரைவில் சீராகும்!

தேயிலை விலையுயர்வு விரைவில் சீராகும்!

‘தேயிலையின் விலை வரும் ஏப்ரல் மாதத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பும்’ என குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறுகிறது.

குன்னூர் தேயிலை வர்த்தக அமைப்பின் பொது செயலாளர் ஜெ.கல்யாண் சுந்தரம் பிசினஸ் லைன் ஊடகத்திடம் இதுகுறித்துப் பேசுகையில், “தற்போது தேயிலையின் விலை ரூ.167.28 என்ற அளவில் இருக்கிறது. இது சென்ற ஆண்டைவிட ரூ.14.88 அதிகமாகும். வடஇந்தியாவில் தேயிலை உற்பத்தி குறைவினாலும் கென்யாவிலிருந்து தேயிலை இறக்குமதி குறைபாட்டினாலுமே இத்தகைய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மெக்லியோட் ரசெல் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரி கே.கே.பஹிடி பேசுகையில், “சந்தைகளில் தேயிலையின் இருப்பு நிலை குறைவாக இருப்பதால் வரும் மார்ச் மாதத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் தேயிலையின் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளதால் தற்போதைய நிலவரப்படி அதிகப்படி விலையான ரூ.14 முதல் 15லிருந்து ரூ.20 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில், வடஇந்தியாவின் தேயிலை உற்பத்தி 997 மில்லியன் கிலோவாகும். இது சென்ற ஆண்டில் 1043 மில்லியன் கிலோவாக இருந்தது. அதாவது 46 மில்லியன் கிலோ குறைவான அளவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி 180 மில்லியன் கிலோவாகும். இது அதற்கு முந்தைய ஆண்டில் 167 மில்லியன் கிலோவாக இருந்தது என்று தேயிலை வாரியம் கூறுகிறது.

செவ்வாய், 20 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon