மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

வலைப்பின்னலில் சிக்கியுள்ளதா உங்கள் வாழ்க்கை?

 வலைப்பின்னலில் சிக்கியுள்ளதா உங்கள் வாழ்க்கை?

சோகம், மகிழ்ச்சி, கோபம், தாபம், ஏக்கம் என்று எல்லா உணர்வுகளையும் மிகைப்படுத்துவது நம் சமூக வழக்கம். தெரிந்தோ, தெரியாமலோ, பல நூற்றாண்டுகளாக இது நம் செயல்பாடுகளில் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. சமூக ஊடகங்களில் போலித்தனமான பிம்பங்களை உருவாக்கிக் குளிர்காய்பவர்கள் ஒருபக்கம் இருக்க, தான் மூச்சுவிடுவதையும் பதிவுசெய்து சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள் மறுபக்கம் அதிகமாகி வருகிறார்கள்.

சமூக ஊடகங்களைத் தேவைக்காகப் பயன்படுத்துவது என்ற நிலையிலிருந்து விலகி, அதன் துணையில்லாமல் ஒரு நொடியைக் கூட கடக்க முடியவில்லை என்ற பெருஞ்சுமை நம்மை அழுத்தி வருகிறது. வரத்தையும் சாபமாக்கிக் கொள்வது, இப்போது பெரும்பாலானவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என்று எல்லாமே, ஏதோ ஒரு தகவலை மற்றவர்க்கு தெரிவிப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால், அப்படித்தான் நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோமா என்ற கேள்வி எழாமல் இல்லை. வெகுசிலரே தங்களுக்குத் தேவையான தகவல்களை அனுப்புகின்றனர் அல்லது பெறுகின்றனர்; அதன்பின், அவர்கள் தங்களது கணினியையோ, ஸ்மார்ட்போனையோ திரும்பிக்கூட பார்ப்பதில்லை. ஆனால், மற்றவர்களின் கதி என்ன?

அவ்வாறு செய்ய இயலாதவர்கள், சில நிமிடங்களுக்கு ஒருமுறை தங்களது சமூக வலைதளப் பக்கங்களைத் திரும்ப திரும்பப் பார்க்கிறார்கள். எந்த நோட்டிபிகேஷனும் வராவிட்டாலும், அப்படியொரு மனநிலையிலேயே வாழ்கிறார்கள். இதன் மூலமாக, சமூக வலைதளங்களுக்குத் தாங்கள் அடிமையானதை கூட அவர்கள் உணர்வதில்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால், காலையில் எழுந்ததும் ஸ்மார்ட்போனைக் கையிலெடுக்கும் வழக்கம் இருப்பவர்கள் அனைவரும் இந்த ரகம் தான். ஏதோ ஒரு வேலையை முடிப்பதற்காக கணினியின் முன் அமர்ந்துகொண்டு, பேஸ்புக்கிலோ அல்லது ட்விட்டரிலோ மூழ்கிக்கிடந்தால் இதனை நம்மால் உறுதி செய்துகொள்ள முடியும். மது, போதைப்பொருட்கள், சிகரெட் போன்றவற்றுக்கு அடிமையாவதைப் போல, தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகும் மனிதர்களின் எண்ணிக்கையும் இப்போது பெருகிவருகிறது.

கட்டுப்படுத்தவே இயலாத எந்தவொரு விருப்பமும், நாம் அதற்கு அடிமையாகிவிட்டோம் என்பதையே உணர்த்துகிறது. இதிலிருந்து விடுபட, கண்டிப்பாக மனநல ஆலோசகர்கள் மற்றும் சிகிச்சை மையங்களின் துணை தேவை. அதனை எளிய வழியில் பூர்த்தி செய்கிறது மைண்ட் ஸோன் மனநல மருத்துவமனை. நடத்தைச் செயல்பாடுகளில் மாற்றம், குணக்கோளாறுகள், வன்முறை மற்றும் தற்கொலை எண்ணம் அதிகமாதல் உட்பட பல மனநலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது மைண்ட் ஸோன் மனநல மருத்துவமனை. நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில், 70 படுக்கை வசதிகள் கொண்ட்து மைண்ட் ஸோன்.

தொலைந்துபோன வாழ்க்கையை மீட்டெடுப்பது மறுபிறப்புக்குச் சமம். அதனைச் சாத்தியப்படுத்துகிறது மைண்ட் ஸோன். இது உளவியல், மனநல மருத்துவம் மற்றும் சமூகச்சேவைகளுக்கான சிறப்பு மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில்குமார் மற்றும் உளவியல் நிபுணர் ஜெயசுதா காமராஜ் நிர்வகித்து வருகின்றனர்.

விளம்பர பகுதி

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon