மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

சேவைக் கட்டணம் செலுத்தாத இந்தியர்கள்!

சேவைக் கட்டணம் செலுத்தாத இந்தியர்கள்!

இந்திய உணவகங்களில் சேவைக் கட்டணம் செலுத்தாத அல்லது சேவைக் கட்டணம் செலுத்தத் தயங்கும் மக்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஏசி உணவகங்களுக்குச் சென்று வந்த சுமார் 8,013 இந்தியர்களிடையே கருத்துக் கேட்கும் ஆய்வு மேற்கொண்ட லோக்கல் சர்க்கிள் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கவில்லை என 27 சதவிகிதத்தினரும், 10 சதவிகிதத்தினர் கட்டணம் செலுத்துவதைத் தவிர்த்ததாகவும், 27 சதவிகிதத்தினர் முறையாக சேவைக் கட்டணத்தைச் செலுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் மாதத்தில் சேவைக் கட்டணம் செலுத்தாத மக்களின் எண்ணிக்கை 35 சதவிகிதத்திலிருந்து ஜனவரி மாதத்தில் 37 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விவகார அமைச்சகம் சார்பாக உணவகங்கள் தங்களது சேவைக்கான கட்டணத்தை பில்களிலிருந்து முற்றிலும் நீக்கும்படி வலியுறுத்துகிறது. மேலும், மக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும் நுகர்வோர் அமைச்சகம் கூறுகிறது. சென்ற ஆண்டின் இறுதியில் உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிப்பது கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னரும் சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்துவருகிறது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon