மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

பொதுநல வழக்குகளுக்கு நீதிமன்றம் கட்டுப்பாடு!

பொதுநல வழக்குகளுக்கு நீதிமன்றம் கட்டுப்பாடு!

பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 32இன்படி, பொதுமக்களின் நலத்தைப் பாதிக்கும் விஷயத்துக்காக, பாதிக்கப்பட்டவரோ அல்லது வேறு ஒரு தனிநபரோ அல்லது தொண்டு நிறுவனமோ மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். சமீப காலமாக பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை உயர் நீதிமன்ற மதுரை கிளைAX விதித்துள்ளது.

அதாவது பொதுநல மனுத் தாக்கல் செய்பவர்கள் அந்த மனுவில் அவர்களுடைய சொந்த பிரச்னை சார்ந்தது இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும், அந்தப் பிரச்னை பெருவாரிய மக்களின் பிரச்னையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே தள்ளுபடியான மனுக்களை மீண்டும் தாக்கல் செய்யக் கூடாது.

மனுதாரர்கள் அதிகாரிகளிடம் தாக்கல் செய்த மனுவையும் அதற்கான பதிலையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும்.

மனுதாரர் தங்களுடைய ஆதார், பான் கார்டு நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

செய்தித்தாள் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நாளிதழ் ஆசிரியரிடம் பேசப்பட்டதா, விவரம் பெறப்பட்டதா என்ற விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல் சமர்ப்பித்தால் அபராதம் விதிக்கப்படும்.

உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து பதிவு செய்யும் வழக்குகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. இதை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளர் இளங்கோவன் நேற்று (பிப்ரவரி 13) அறிவித்துள்ளார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon