மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ஆன்லைன் வேலைவாய்ப்பு உயர்வு!

ஆன்லைன் வேலைவாய்ப்பு உயர்வு!

ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை சென்ற ஜனவரி மாதத்தில் 14 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக நவ்கரி.காம் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆன்லைன் வாயிலாக வேலைதேடும் நடவடிக்கை மற்றும் பணியமர்த்துதல் குறித்து நவ்கரி.காம் இணையதளம் ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வழியாக வேலைவாய்ப்பு தேடல் மற்றும் பணியமர்த்தும் நடவடிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நவ்கரி.காம் தெரிவித்துள்ளது. நவ்கரி வேலை தேடும் குறியீடு ஜனவரி மாதத்தில் 1,951 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகக் காப்பீட்டுத் துறையில் 73 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் 44 சதவிகிதமும், ஆயில் மற்றும் எரிவாயுத் துறையில் 43 சதவிகிதமும் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மான்ஸ்டர்.காம் இணையதளம் வெளியிட்டிருந்த ஆன்லைன் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வறிக்கையில், ஜனவரி மாதத்துக்கான மான்ஸ்டர் வேலைவாய்ப்புக் குறியீடு 12 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. அதிகபட்சமாக வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் 71 சதவிகிதம் உயர்ந்திருந்தது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 46 சதவிகிதம் உயர்ந்ததாகவும், நிதிச் சேவைகள் துறையில் 36 சதவிகித வளர்ச்சி பதிவாகியிருந்ததாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon