மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

எல்பிஜி: லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை!

எல்பிஜி: லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை!

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் புதிய வாடகை டெண்டரை அறிவித்தன. அதன்படி டேங்கர் லாரிகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் நிலை உருவானது.

நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த 12ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கின.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 4500 கியாஸ் டேங்கர் லாரிகள் இன்றும் (பிப்ரவரி 14) மூன்றாவது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றன. இவர்களின் போராட்டத்தால் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு கியாஸ் தட்டுப்பாடு நிலவும் என்று கூறப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ. 2 முதல் 5 கோடி வரை இழப்பீடு ஏற்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதை ஏற்ற லாரி உரிமையாளர்கள் மும்பை சென்றுள்ளனர்.

இன்று மாலை நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon