மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு!

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு!

சர்ப்ரைஸ் கிப்ட், டேட்டிங், வாழ்த்து அட்டைகள் எனக் காதலர் தினத்தை உலகம் முழுவதுமுள்ள காதலர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூரில் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பஜ்ரங் தள் குழுவினர் பேரணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தெருவில் நாங்கள் எந்த ஒரு ஜோடியைக் கண்டாலும் வன்மையாகக் கண்டிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலர்களுக்குக் காதலர் தினத்தைக் கொண்டாட உரிமை இருக்கும்போது எங்களுக்கு எங்களுடைய கலாச்சாரத்தைக் காப்பாற்ற உரிமையுள்ளது. அதன்படி காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொது இடங்களில், பூங்காக்களில் காதல் ஜோடிகளைக் கண்டால் அவர்களுக்கு உடனடியாக திருமணத்தை நடத்திவைப்போம் என்று நாக்பூர் பஜ்ரங் தள் உறுப்பினரான மனிஷ் மோரியா கூறினார்.

இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்புக் கூறுங்கள் என்றும் லவ் ஜிகாத் , இந்துப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அங்கு சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

சென்னையிலும் இந்து முன்னணித் தொண்டர்கள் காதலர் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்துவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon