மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ஓட்டுநர் பள்ளியில் குவியும் பெண்கள்!

ஓட்டுநர் பள்ளியில் குவியும் பெண்கள்!

பணிபுரியும் பெண்களுக்கான தமிழக அரசின் இருசக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விதமாக, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நாடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த இருசக்கர வாகன மானியத் திட்டத்துக்கான மானியம் 50 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மானியம் ரூ.25,000க்குக் குறைவாக இருப்பின் அத்தொகை அரசால் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகிலிருந்தே ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஓட்டுநர் பயிற்சி பெறும் விண்ணப்பங்கள் அதிகரித்துவருகின்றன. ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தினசரி 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் கடந்த 20 வருடங்களாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வரும் என்.ஷங்கர் என்பவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “ஜனவரியில் இருசக்கர மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து 20 பெண்கள் இதுவரையில் இங்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது ஆன்லைன் வாயிலாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறை எளிதாகியிருந்தாலும், பயிற்சிப் பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். உரிமம் ஒன்றுக்கு நாங்கள் ரூ.500 கட்டணமாக வசூலிக்கிறோம்” என்றார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon