மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

துல்கர் அளித்த லவ்வர்ஸ் டே ட்ரீட்!

துல்கர் அளித்த லவ்வர்ஸ் டே ட்ரீட்!

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் உருவாகிவரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

காதலர் தின ஸ்பெஷலாகப் பல திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. பாடல்கள், டீசர், ட்ரெய்லர், போஸ்டர் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் துல்கர் சல்மான், ரிது வர்மா ஜோடி சேர்ந்திருக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வழக்கமான போஸ்டர்களைத் தாண்டி இதில் துல்கர், ரிது வர்மா இருவரின் காதல் சேட்டைகள் அடங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

துல்கர் சல்மானின் 25ஆவது படமாக உருவாகிவரும் இதனைத் தேசிங் பெரியசாமி இயக்கிவருகிறார். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துவரும் இதற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். ‘FTS ஃபிலிம்ஸ், ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகின்றன. தற்போது, படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon