மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ப்ரியா வாரியர் மீது புகார்!

ப்ரியா வாரியர் மீது புகார்!

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகப் புயலைக் கிளப்பிவரும் ப்ரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு அதாரு லவ் படத்தில் வரும் மாணிக்க மலராய பூவி பாடலில் வார்த்தைகள் ஏதுமின்றி கண் அசைவுகள் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுவருகிறார் ப்ரியா வாரியர். இந்தக் காட்சியில் சக பள்ளித் தோழனான முகமது ரோஷனிடம் புருவத்தை உயர்த்தி ப்ரியா வாரியர் காதலை வெளிப்படுத்துவார். இந்தக் காட்சி இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தியதாக முகமது அப்துல் முக்கித் என்ற இளைஞர் புகார் மனுவை ஹைதராபாத் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

இந்நிலையில் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு ப்ரியா வாரியர் அளித்த பேட்டியில், “இந்தப் பாடல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றது என்னை நெகிழ்வடையச் செய்துள்ளது. குறிப்பிட்ட அந்தக் காட்சிக்காக எந்த முன் தயாரிப்பிலும் ஈடுபடவில்லை. கண் அசைவுக் காட்சியைப் படப்பிடிப்பின்போது முடிவெடுத்து உடனே நடித்து முடித்தோம்” என்று கூறியுள்ளார்.

ப்ரியா நடிப்பில் இதுவரை எந்தப் படமும் வெளிவராத நிலையில் கடந்த நான்கு நாள்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை எட்டியுள்ளது. மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் 19 லட்சம் பேரைக் கொண்டிருந்ததே சாதனையாக இருந்தது; ப்ரியா வாரியர் தற்போது அதை முறியடித்துள்ளார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon