மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்!

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு நாளை (பிப்ரவரி 15) ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

“பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறவுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தத்கல் உட்பட, ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். செய்முறை தேர்வு குறித்த விவரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகித் தெரிந்துகொள்ள வேண்டும்” எனத் தேர்வுத் துறை இயக்குநர், தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon