மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

தாஜ்மஹால்: உயரும் நுழைவுக் கட்டணம்!

தாஜ்மஹால்: உயரும் நுழைவுக் கட்டணம்!

காதலின் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் வரும் ஏப்ரல் முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹால் ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முகலாயர் காலத்து கட்டடக் கலைக்கு சான்றாக இருப்பதால், இதற்கு உள்நாடுகளில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் தினசரி அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்க்க உள்நாட்டவர்களுக்கு மூன்று மணி நேரத்துக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கென வெவ்வேறு நிறங்களில் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தற்போது வரை உள்பகுதியில் உள்ள மும்தாஜ் கல்லறைக்குச் சென்று பார்வையிட கட்டணம் ஏதும் கிடையாது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் தாஜ்மஹாலின் வெளியே சுற்றிப்பார்க்க மூன்று மணி நேரத்துக்கு ரூ.50 எனவும், உள்பகுதிக்குச் சென்று பார்க்கக் கூடுதலாக ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வெளிநாட்டவர்களுக்கு பொருந்தாது. ஏனென்றால், அவர்களுக்கு ஏற்கனவே அதிகமான தொகையே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon