மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ஜிஎஸ்டியில் உயரும் வரி வருவாய்!

ஜிஎஸ்டியில் உயரும் வரி வருவாய்!

அடுத்த நிதியாண்டின் இறுதியில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் இணையவழி மூலம் பணம் செலுத்துதல் போன்றவற்றால் அரசின் வருவாய் உயரும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது ஜிஎஸ்டியின் கீழ் அனைத்து நிறுவனங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. வரும் நாள்களில் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் நடைமுறைகள் முழுமையடையும்பட்சத்தில் இந்திய அரசின் வருவாய் பற்றிய முழு விவரத்தையும் அனலிடிக்ஸ் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் இயக்குநரகம் வெளியிடும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வருவாய் ரூ.7.44 லட்சம் கோடியாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஜூலை முதல் பிப்ரவரி வரையிலான வரி வருவாய் ரூ.4.44 லட்சம் கோடியாகும். ஜிஎஸ்டியின் கீழ் ஜூலை மாதத்தில் ரூ.95,000 கோடியும், ஆகஸ்ட்டில் ரூ.91,000 கோடியும், செப்டம்பரில் ரூ.92,150 கோடியும், அக்டோபரில் ரூ.83,000 கோடியும், நவம்பரில் ரூ.80,808 கோடியும், டிசம்பரில் ரூ.86,703 கோடியும் வசூலிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரும் நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon