மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

கொலம்பியாவில் செழியனின் ‘டுலெட்’!

கொலம்பியாவில் செழியனின் ‘டுலெட்’!

ஒளிப்பதிவாளர் செழியனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் Tolet திரைப்படம் கொலம்பிய திரைப்பட விழாவான FestMedallo-வில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

The Medellin International Film Festival என்ற பெயரில் கொலம்பியாவில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழா கொலம்பியாவின் மூன்றாவது வருடமாக, பிப்ரவரி 15 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முழு நீளத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேஷன் படங்கள் என உலகம் முழுவதிலுமிருந்தும் சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து Fest Medalloவில் திரையிடுவது வழக்கம்.

திரையுலகத்தினர் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு முதலீட்டு நிறுவனங்களையும் இவ்விழாவுக்கு அழைத்து, அவர்கள் விரும்பும் படங்களை முழு நீள திரைப்படமாகவும், மாற்று மொழிகளில் எடுக்கவும் Fest Medallo உதவுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து FICTION பிரிவில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு படங்களில் ஒன்றாக டுலெட் தேர்வாகியிருக்கிறது. இதனுடன் ‘Luqman’ என்கிற மலேசியத் திரைப்படம், ஸ்லொவோகியாவைச் சேர்ந்த ‘Kidnapping', நைஜீரியாவிலிருந்து ‘Eni', ஜெர்மனியிலிருந்து 'Die Tochter', போலாந்தைச் சேர்ந்த ‘Dark Iron', கொசோவாவிலிருந்து 'Agnus Dei' மற்றும் ஸ்பெய்னிலிருந்து '500 Euros’ ஆகிய திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில்

டுலெட் திரைப்படம் ‘கோல்டன் பெங்கால் டைகர்’ விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon