மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

கப்பல் விபத்தில் ஐந்து பேர் பலி!

கப்பல் விபத்தில் ஐந்து பேர் பலி!

கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொச்சியில் ஓஎன்ஜிசிக்குச் சொந்தமான சாகர் பூஷண் கப்பலில் நேற்று (பிப்ரவரி 13) காலை 10.45 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில், சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர். இரண்டு தீயணைப்பு வீரர்கள், இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஒரு மேற்பார்வையாளரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறைந்தது மூன்று பேர் கப்பலுக்குள் சிக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

இதுகுறித்து, “எரிவாயு கசிவால் கப்பலின் நீர் தொட்டியில் வெடிப்பு ஏற்பட்டது. நீர் குழாயில் எப்படி எரிவாயு ஒருங்கிணைப்பு நடந்தது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். கப்பல் பழுது பார்க்கும் வேலை மிகவும் ஆபத்தான வேலைகளில் ஒன்றாகும். அதனால், நாம் போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். உறுதியான பாதுகாப்பு இருந்தபோதிலும், இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இது ஓர் அசாதாரண விபத்து. விபத்துக்குள்ளான கோணத்தைக் எங்களால் காண முடியவில்லை. இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தக் கப்பலில் நாங்கள் சேவையாற்றிவருகிறோம். பழைய கப்பல்களைக் கையாள்வதில் நாம் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால், இன்று நம்முடைய நாள் அல்ல என்று தெரிகிறது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும்” எனக் கப்பல் கட்டும் துறையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மது எஸ். நாயர் கூறினார்.

சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அரசுக்குச் சொந்தமான, இந்தியாவில் மிகப்பெரிய கப்பல் கட்டுதல் மற்றும் பராமரிப்பு வசதி, விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை செய்ய அறிவுறுத்தியுள்ளார். மூன்று உயர் மட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

விபத்து நடந்தபோது 20 தொழிலாளர்கள் கப்பலில் இருந்தனர். “நேற்று விடுமுறை என்பதால், பெரியளவிலான இழப்பு தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும்” என பாதிக்கப்பட்ட தொழிலாளியான ராஜீவன் கூறினார்.

“பெரிய சப்தம் வந்ததையடுத்து, நான் சில கிலோமீட்டர் தொலைவில் தூக்கி எறியப்பட்டேன். கப்பல் தொட்டிக்குள் வெல்டிங் வேலை நடந்துகொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்தது. அதற்குள்ளே பாதிக்கப்பட்ட அனைவரும் இருந்தனர். அந்தத் தொட்டியின் ஒரு பகுதியை உடைத்து உள்ளே இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்” என பினிஷ் கூறினார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon