மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

விமல்: குவியும் படங்கள்!

விமல்: குவியும் படங்கள்!

களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா எனக் கவனிக்கத்தக்க படங்களில் நடித்த விமலுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப் படங்கள் அமையவில்லை. கடந்த ஆண்டில் அவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ராஜசேகரின் ‘மாப்ள சிங்கம்’ படத்துக்குப் பிறகு விமல் நடித்த சி.எஸ்.அமுதனின் ‘ரெண்டாவது படம்’ பல மாதங்களாக வெளியாகாமல் உள்ளது.

சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகையறா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஜி.பூபதி பாண்டியன் இயக்கியிருந்த இந்தப் படத்துக்குப் பின் அடுத்தடுத்து பல படங்களில் அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.

சற்குணம் இயக்கத்தில் ஓவியாவுடன் இணைந்து நடிக்கும் ‘K2’, முத்துக்குமாரின் கன்னி ராசி என இரண்டு படங்களில் நடித்துவருகிறார். இதில் கன்னி ராசி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. ‘K2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், வெற்றிவேல் படத்தை இயக்கிய வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய் ஆகியோர் இயக்கவுள்ள படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். இவை தவிர, இன்னும் இரு படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon