மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

வளர்ச்சிக்கு உதவும் வேலை உருவாக்கம்!

வளர்ச்சிக்கு உதவும் வேலை உருவாக்கம்!

இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் சர்வதேசப் பொருளாதார சக்திகளில் இந்தியா முன்னிலை வகிக்க முடியும் என்று உலக அரசு உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில், இந்தியா எதிர்காலத்தில் உலக பொருளாதார சக்திகளில் முன்னேறிச் செல்லுமா என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் தற்போது சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஏழாவது இடத்தில் உள்ள இந்தியா, 2050ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தில் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஷோபனா காமினெனி, ஹீரோ எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் காந்த் முன்ஜால், காடிலா பார்மாக்யூடிகல்ஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜிவ் மோடி, டெக் மஹிந்திரா லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சி.பி.குர்நானி போன்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உலகளவில் இந்தியா முதன்மை பெறுவது குறித்த கலந்துரையாடலில் டெக் மஹிந்திரா லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சி.பி. குர்நானி பேசுகையில், ”இந்தியாவைப் பொறுத்தவரையில் விவசாயம், உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் எப்பொழுதோ உலகளவில் முதன்மை பெற்று விட்டன. சிறு நிறுவனங்களை மேம்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இந்திய தொழில் துறையை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்க முடியும்” என்றார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon