மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ரன்வீர் சிங்: மனம் திறந்த தீபிகா

ரன்வீர் சிங்: மனம் திறந்த  தீபிகா

தனக்கும் ரன்வீர் சிங்குக்கும் உள்ள உறவு பல கட்டங்களைத் தாண்டி வலுவாகியிருக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.

பத்மாவத் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் காதலித்துவருவதாகக் கூறப்படும் நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பதிலளித்துள்ள தீபிகா படுகோன், “சினிமாவில் சாதிப்பதற்கு நடிகர், நடிகைகள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். சொந்த பந்தங்கள், குடும்பங்கள், நண்பர்களை விட்டு விலகி இருக்க வேண்டும். நானும் அதற்குத் தயாராக இருந்ததால்தான் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வர முடிந்தது. பத்மாவத் போன்ற படங்களில் நடித்தால் இன்னும் நிறைய கஷ்டப்பட வேண்டும். இவ்வளவு உழைத்தும் அந்தப் படத்துக்கு சர்ச்சை ஏற்பட்டது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. அதையும் மீறிப் படம் வெற்றிகரமாக ஓடி கஷ்டங்களை மறக்கச்செய்தது” என்று கூறியுள்ளார்.

“சில உறவுகள் முறியும்போது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். அந்த வேதனையைக் காலம்தான் குணப்படுத்தும். எனக்கும் அதுபோன்ற முறிவுகள் ஏற்பட்டுள்ளன. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு திருமணத்தில்தான் முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. எனக்கும் நடிகர் ரன்வீர் சிங்குக்கும் உள்ள உறவு பல கட்டங்களைத் தாண்டி வலுவாகியிருக்கிறது. இருவரும் சினிமாவில் தீவிரமாகப் போராடிவருகிறோம். எங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. 15 வருடங்களாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இதிலிருந்து விடுபட்டுக் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon