மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

வடிவேலு எனும் தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு

வடிவேலு எனும் தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு

தமிழ்சினிமா சமூகத்தை அப்படியே பிரதிபலிக்க ஆரம்பிச்சுருச்சு. அதுவும் இந்த தடவையும் வடிவேலு தான் முன்னால நிற்காரு. வாழ்க்கையில நாம சந்திக்கிற எந்த பிரச்னைக்கும் அவர் எதாவது சொல்லி வச்சிருக்காரு. அரசியல்வாதிகள்ல இருந்து சூப்பர்ஸ்டார்கள் வரைக்கும் வடிவேலுவோட தாக்கம் இருக்குறதை பார்த்திருப்போம். ரவுடிகள் கிட்டயும் நம்ம தலைவன் தான் ஆதிக்கம் செலுத்துறாருங்குறதை இன்னைக்கு தான் பார்த்தேன். காவல்துறை, ரவுடி பினு வீடியோ ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க. அதுல “நான் ரவுடிலாம் இல்லைங்க, ஐ எம் பாவம்”னு பினு பேசும் போது தலைநகரம், கந்தசாமி, வில்லு படங்கள்ல வர்ற வடிவேலு தான் கண்ணு முன்னால வாறாரு. இன்னும் கொஞ்ச நாள்ல ட்ரம்ப்பே வந்து வடிவேலு டயலாக் பேசுனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.

@Asha_twits

பிறருடைய முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடையும் நேரம்.

#லைனில் நிற்கும்_போதுமட்டுமே

@Kozhiyaar

எங்க தெருல ஒரு நாய் என்னை பார்த்து தினமும் குரைச்சிட்டே இருந்துச்சு!!

சரி ப்ரெண்டு ஆக்கிகலாம்னு ஒரு நாள் கொஞ்சம் சோறும் குழம்பும் வச்சேன்!

அன்னைல இருந்து பார்த்தாலே தெறிச்சு ஓடுது!!

CreativeTwitz

நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை. கண்ணீர் விட்டு கதறிய பினு

// கத்திய வச்சு கேக் வேட்டிருக்கான் ஒரு துண்டு கூட உங்களுக்கு தரல தூக்குல போடுங்க ஏட்டையா அவன

@senthilcp

தமிழக மக்களின் பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாக அணுகி சரிசெய்யும் அரசு பாஜக அரசு: ஹெச்.ராஜா # அப்ப அதிமுக அரசு லீவ் ல இருக்கோ?

@senthilcp

மாப்ளைக்கு சொந்த வீடு இருக்குங்களா?

பொண்ணோட அப்பா வீட்டை எழுதி வெச்சா அவர் சொந்த வீடு மாதிரி பாத்துக்குவார்

சரி,மாப்ளை என்ன பண்றார்?

பொண்ணு பாத்துட்டு இருக்கார்

அதில்லை,சாப்பாட்டுக்கு என்ன பண்றார்?

அதுக்குதான் மேரேஜ் பண்றார்

@vandavaalam

சென்னை போலீஸ் கடந்த சில மாதங்களாகவே வாக்குமூல வீடியோக்களை பப்ளிக்கா போடுற பழக்கம் அதிகரித்துள்ளது. இது முற்றிலும் தவறான முன்னுதாரணம். Mob Justice mentalityஐ அதிகரித்து நம்மை கற்காலத்திற்கு தள்ளி barbariansஆக மாற்றிவிடும்.

@வாசுகி பாஸ்கர்

போக்குவரத்து துறையை சீரமைக்க 27 பரிந்துரைகளை வழங்கினார் ஸ்டாலின்.

இந்த 27 பரிந்துரைகளை ஸ்டாலீனும் படிச்சிருக்க மாட்டார், எடப்பாடியும் படிக்க போறதில்ல

@Thalapathy Bharani

சொத்துக்குவிப்பு வழக்கில் தான் குற்றவாளி என்று ஜெயலலிதாவுக்கே தெரியாது.. - விஜயதாரனி.

வேனும்ன்னா போய் சொல்லிட்டு வாங்க

@mohanramko

சிந்திய உணவினை வீணாக்கி சேமிக்காத மனிதர்களையும் 'தூக்கி சாப்பிட்டு விடுகிறது' எறும்பு

@stalinsk50

தூங்கும் குழந்தையை வேடிக்கை பார்ப்பதை விடவா? தியானம், யோகாவெல்லாம் மன அமைதியை தந்துவிடப் போகிறது...

@mufthimohamed1

எவ்வளவு சம்பளம் என்று கேட்கும் யாருமே, எவ்வளவு கடன் உள்ளது என்று கேட்பதில்லை..

@HAJAMYDEENNKS

நாடு விட்டு நாடு போவதில் பறவைகள் மட்டுமே

சந்தோசத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கின்றன...!

@Boopathy Murugesh

ஆபிஸ் ஐடி கார்டை மறந்து வச்சுட்டு கிளம்பும்போது "என்னங்க.."ன்னு கூப்ட்டு எடுத்து கொடுக்கவாச்சும் ஒரு கல்யாணம் பண்ணிடனும்..

@mufthimohamed1

ஊற வச்ச துணிய பாக்கும்போது,ஆதிவாசிகள் மாதிரியே வாழ்ந்துருக்களாம்னு தோனுது.

@senthilcp

குருவே!தமிழைத் தவிர தமிழரிடம் வேறென்ன சிறப்பிருக்கிறது..?

விருந்தோம்பல் பண்பு ,வந்தாரை வாழ வைப்பது ,வந்தது நயன்தாராவோ ,ஜிமிக்கி கம்மலோ,ப்ரியா வாரியரோ

@MJ_twets

சொந்த வீடும், நல்ல சம்பளத்தில் ஒரு வேலையும் ஆண்களுக்கான வரதட்சணை.!

@Punithatk

சாப்பிட மட்டுமே தெரிந்த வயதில் மகளாக இருப்போம்..,

எப்படி சமைத்தாலும் நன்றாக இல்லாத போது மனைவியாகி இருப்போம்...,

எப்படி சமைத்தாலும் நன்றாக இருக்கும் போது அம்மாவாகி இருப்போம்...

@Boopathy Murugesh

காதலர் தினம் கழிசடைகளின் விழா - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

நம்ம மதத்துல அர்ஜுன் சம்பத் மாதிரி அங்க அவுக..

@ungalhabeeb

மாத்திரை சாப்பிடாத மனிதரை பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்..

@ajmalnks

குழந்தைகளுக்கு கெடுதலை உருவாக்கும் அனைத்து மிட்டாய்களும் கடைகளின் முன்வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

@senthilcp

தலைவரே!ரோட்டோரக்கடைல ஏன் இட்லி சாப்ட்டீங்க?

ஒரே கல்லுல 2 மாங்கா அடிக்க

எப்டீ?

நாளை பேப்பர்ல ,டிவி ல நம்ம நியூஸ் வரும் ,பெரிய ஹோட்டல்ல சாப்ட்டா ஜிஎஸ்டி வரும்

@love_twitz

அம்மா சிவராத்திரிக்கு பக்கத்து வீட்டுல சுண்டல் கொலுகட்டைலாம் செய்றாங்க..நீ செய்யலை?

அதெல்லாம் நம்ம வீட்ல பழக்கமில்ல டி..

அதான..நல்ல பழக்கம்லாம் பழகி வச்சிக்காத.

@Kozhiyaar

கோபத்தில் அழுது கொண்டிருக்கும் குழந்தையை ஒருமுறை சிரிக்க வைத்துவிட்டால் அதற்கு மேல் அழுவதில்லை!!!

@mufthimohamed1

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை - விசாரணை கமிஷனில் விவேக் தகவல்

நீ மட்டுமா பாக்கல,நானும்தான் பாக்கல,ஏன் அந்த டாக்டரே பாக்கல..

-லாக் ஆஃப்

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon