மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரமான படம்!

படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரமான  படம்!

பொன்ராம் இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குநர் ரவிகுமாரின் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அதன் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது முன்னணி நிறுவனம் ஒன்று.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். சமந்தா நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்திற்குப் பிறகு இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகவிருக்கிறது.

சமீப காலமாக எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கிவரும் சன் டிவி நிறுவனம் ரவிகுமார், சிவகார்த்திகேயன் இணையும் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையையும் கைப்பற்றியுள்ளது. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைபற்றியிருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon