மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

மழைப்பொழிவால் சேதமடைந்த பயிர்கள்!

மழைப்பொழிவால் சேதமடைந்த பயிர்கள்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மாற்றம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த ராபி பயிர்கள் சேதமடைந்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ கால மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள அதிக மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாகக் கோதுமை, கொண்டைக் கடலை, சோளம், கம்பு போன்ற ராபி பயிர்களும், மாம்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களின் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்ற ஞாயிற்றுக் கிழமை பெய்த மழையால் மகாராஷ்டிர மாநிலத்தின் 11 மாவட்டங்களின் 1.24 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. மரத்வாடா மற்றும் விதர்பா போன்ற இடங்களில் பயிரிடப்பட்ட கம்பு, சோளம், துவரம் பருப்பு போன்ற பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இப்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தவையாகும். பழங்களில் திராட்சை, ஆரஞ்சு, மாம்பழம் போன்றவை பூக்கும் பருவத்தில் இருந்தவையாகும்.

இதுகுறித்து சேட்கரி ஜகர் மன்ச் அமைப்பைச் சேர்ந்த பிரஷந்த் கவாண்டே எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில்,” சென்ற காரிப் பருவ பயிர்களின் விலை உயர்வு மற்றும் பூச்சித் தாக்குதல் போன்ற பாதிப்புகளுக்கு உண்டான இழப்பீடுகளையே விவசாயிகள் பெறவில்லை. அவர்களுக்கான கடனுதவியும் சரி வர வழங்கப்படுவதில்லை. தற்போதைய கடும் மழை மற்றும் பனிப்பொழிவால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். இதனால் தற்கொலைகள் அதிகரிக்கும் அச்சம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

வானிலை ஆராய்ச்சி நிபுணர் சக்தி தேவி பேசுகையில்,”மேற்கில் ஏற்பட்ட இப்பாதிப்பினால் மத்திய இந்தியா மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பஞ்சாப், கிழக்கு மத்திய பிரதேசம், விதர்பா, சத்திஸ்கர், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் போன்ற இடங்கள் மிக அதிகமாகப் பாதிப்படைந்துள்ளன. மக்களுக்குப் பருவ நிலை மாறுதல் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon