மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஜுங்கா: காதலர்களுக்கான ஒரு பாடல்!

ஜுங்கா: காதலர்களுக்கான ஒரு பாடல்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ஜுங்கா படத்தின் பாடல் ஒன்று காதலர் தின ஸ்பெஷலாக வெளிவரவுள்ளது. அந்தப் பாடலின் கிளிம்ப்சே வீடியோ வெளியாகியிருக்கிறது.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி-கோகுல் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ஜுங்கா. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா நடித்துவருகிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் கூட்டிப் போ கூடவே பாடல் காதலர் தின ஸ்பெஷலாக நாளை (பிப்ரவரி 14) வெளிவரவுள்ளது. இந்தப் பாடலின் கிளிம்ப்சே வீடியோவை சாயீஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி, சாயீஷா இருவருக்குமான காதல் பாடலாக உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் விஜய் சேதுபதி ஸ்டைலிஷ் லுக்கில் கவர்கிறார். சித்தார்த் விபின் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை லலிதானந்த் தந்திருக்கிறார். ரனினா ரெட்டி, சத்ய ப்ரகாஷ் இருவரும் பாடியுள்ளனர். இந்தப் பாடலில்,

கூட்டிப் போ கூடவே ஆகாயம் தாண்டியும்

கூட்டிப் போ கூடவே ஆளில்லா தீவுகள்

கூட்டிப் போ கூடவே காணாத வேரிடம்

கூட்டிப் போ கூடவே வாழாத ஓரிடம்

என ரனினா குரலில் ஒலிக்கும் இந்த வரிகள் பெண்ணின் காதல் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கின்றன. மெலடி ரகமாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் காதலர் தினத்தன்று ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடலாக அமையும் எனலாம்.

கூட்டிப் போ கூடவே பாடல் கிளிம்ப்சே

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon