மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

மீண்டு வருவாரா ரோஹித்?

மீண்டு வருவாரா ரோஹித்?

கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், அதே இலங்கைக்கு எதிராக டி-20 போட்டியில் சதம் என வெளுத்து வாங்கிய ரோஹித் ஷர்மாவுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக அமையவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடி வெறும் 40 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் (சராசரியாக 10.00). 2013ஆம் ஆண்டு தொடக்க ஆட்டக்காராக புரமோஷன் பெற்ற பிறகு ஒருநாள் தொடர் ஒன்றில் அவருடைய ஆகக் குறைவான சராசரி இதுதான்.

ஹிட்மேன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா, ஒருநாள் அரங்கில் இதுவரை மூன்று முறை 200 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்திய பிட்ச்களில் பவுலர்களை அலறவிடும் இவர், தென்னாப்பிரிக்கா போன்ற பிட்ச்களில் தொடர்ந்து சொதப்புகிறார்.

தென்னாப்ரிக்க மண்ணில் ரோஹித்தின் சொதப்பலான ஆட்டத்துக்கு அவரது மோசமான ஃபுட் வொர்க்கே காரணமாக கூறப்படுகிறது. சரியான அளவிலும் வரிசையிலும் வீசப்படும் பந்துகளையும் ஆஃப் திசையில் வரும் பவுன்சர் பந்துகளையும் சமாளிப்பதில் அவருக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கவுள்ளன. அங்குள்ள ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் விதமாகவே இருக்கும். எனவே தொடர் தடுமாற்றத்தால் திணறும் ரோஹித் ஷர்மா, இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் தன்னை நிரூபித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon