மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

மானிய ஸ்கூட்டர்: 3 லட்சம் பேர் விண்ணப்பம்!

மானிய ஸ்கூட்டர்: 3 லட்சம் பேர் விண்ணப்பம்!

மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்குத் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பணிக்குச் செல்லும் மகளிர் பயன் பெறும் வகையில் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தின் கீழ் ரூ.25,000 அல்லது ஸ்கூட்டரின் விலையில் 50 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி வரை ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்பட்டுவந்தன. மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கவும், இருசக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெறவும் பெண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்தனர்.

தமிழகம் முழுவதிலும் கடந்த 10ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டங்கள் வாரியாக விண்ணப்பித்தவர்கள் விவரம்:

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தகுதியான ஒரு லட்சம் பேரைத் தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon