மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ‘சரமாரி’!

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ‘சரமாரி’!

கமல் ஜீ தயாரித்து இயக்கும் சரமாரி திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகிவருகிறது.

யூகன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கமல் ஜீ முதல் படத்திலேயே வித்தியாசமான திகில் படம் மூலம் கவனம் ஈர்த்தார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் சரமாரி திரைப்படம் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகிவருகிறது.

அறிமுக நடிகர்கள் பிரதான வேடம் ஏற்று நடிக்கும் இப்படத்தில் எழுத்தாளர் வேல.ராம மூர்த்தி, பாம்பே செல்வம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வரும் நிலையில் டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 14) வெளியாகவுள்ளது. ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ரஷாந்த் அர்வின் இசையமைக்கிறார். இயக்குநர் கமல் ஜீ படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

நெல்லை, திருச்சி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon