மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

விசாரணை ஆணையத்தில் விவேக் ஆஜர்!

விசாரணை ஆணையத்தில் விவேக் ஆஜர்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் விவேக் ஜெயராமன் இன்று (பிப்ரவரி 13) ஆஜரானார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை, எழிலக வளாகத்தில் செயல்படும் விசாரணை ஆணையத்தின் முன்பு திமுகவைச் சார்ந்த மருத்துவர் சரவணன், அரசு தலைமை மருத்துவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவர் சகோதரர் தீபக், முன்னாள் தலைமைச் செயலர்கள் ராம்மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உட்படப் பலர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓ.வுமான விவேக் ஜெயராமனுக்கு கடந்த 9ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் விவேக்கும் அவருடன் மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் முன்பாக விவேக் இன்று பிப்ரவரி ஆஜராகி விளக்கமளித்தார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon