மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஏற்றுமதி ரீபண்ட் தொகையில் தாமதம்!

ஏற்றுமதி ரீபண்ட் தொகையில் தாமதம்!

கடந்த அக்டோபர் மாத ஏற்றுமதி வர்த்தகத்திற்கான ரீபண்ட் தொகை வழங்க மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏற்றுமதிக்கான ரீபண்ட் தொகையை திரும்ப வழங்குவதற்கு மிகுந்த தாமதமானது. வரி நடைமுறை மாற்றப்பட்டதால் அமைப்பு முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருந்தது. இதனால் அக்டோபரில் ரீபண்ட் தொகை வழங்கத் தாமதமானது. இருப்பினும் நவம்பரில் ஏற்றுமதித் துறை 30.55 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதித் துறை கண்ட அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும். மத்திய அரசு தொடர்ச்சியாக ஏற்றுமதித் துறையில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு வருகிறது.'

இந்நிலையில் பிப்ரவரி 11ஆம் தேதி செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, "2016-17 நிதியாண்டில் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலான ஏற்றுமதி மதிப்பு ரூ.76,980 கோடியாக இருந்ததாக அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளது. அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் அந்நிய நாடுகளுடனான வர்த்தக மதிப்பு 1 லட்சம் கோடி டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியிருந்தார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon