மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

தினம் ஒரு சிந்தனை: இலக்கு!

தினம் ஒரு சிந்தனை: இலக்கு!

இலக்குகளை அடைவதற்கான குறிப்பிட்ட திட்டம் இல்லாதபட்சத்தில் அவை முற்றிலும் வெறும் கற்பனையான ஒன்றே.

- ஸ்டீபன் கோவே (அக்டோபர் 24,1932 - ஜூலை 16, 2012). அமெரிக்காவைச் சேர்ந்த மேலாண்மை குரு, நூலாசிரியர், பேராசிரியர், பேச்சாளர் ஆலோசகர், சிந்தனையாளர். திறமைமிக்க மனிதர்களின் 7 பழக்கங்கள் என்னும் இவருடைய நூல் லட்சக்கணக்கில் விற்பனையாகி உலக அரங்கில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. 25 செல்வாக்குமிக்க அமெரிக்கர்களில் ஒருவர் ஸ்டீபன் கோவே என டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்து அறிவித்தது. கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றின் மூலம் வெற்றிக்கான பண்புகள் குறித்துப் பயிற்சியளித்தவர்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon