மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

லஞ்சம் பெற்ற வழக்கில் ஏழு ஆண்டு சிறை தண்டனை!

லஞ்சம் பெற்ற வழக்கில் ஏழு ஆண்டு சிறை தண்டனை!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே, ஐந்தாண்டுகளுக்கு முன்பு லஞ்சம் பெற்ற வழக்கில், நில அளவையாளருக்கு நேற்று ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு தமக்குச் சொந்தமான நிலத்தை அளக்க முடிவு செய்தார். பின்னர் நிலத்தை அளக்க நில அளவையாளர் மணிமொழி என்பவரை அணுகினார்.

நிலத்தை அளக்க வேண்டும் என்றால், தமக்கு லஞ்சம் தருமாறு மணிமொழி, கருணாநிதியிடம் கேட்டுள்ளார். அதற்குக் கருணாநிதியும் நிலத்தை அளப்பதற்காக 2,500 ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டார். பின்னர் கருணாநிதியிடமிருந்து லஞ்சம் பெறும்போது, மணிமொழியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் சுமார் ஐந்து வருடத்துக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 12) தீர்ப்பு வழங்கப்பட்டு முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் நில அளவையாளர் மணிமொழிக்கு சுமார் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon