மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

இசை ஆல்பத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில்

இசை ஆல்பத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில்

‘ஜிமிக்கி கம்மல்’ என்ற ஒரே பாடலின் மூலம் உலகறியப்பட்டவரான ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் நடிப்பில் வெளியாகவிருக்கும் இசை ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ‘எண்டம்ம்மடே ஜிமிக்கி கம்மல்’. இந்தப் பாடலுக்கு கேரளாவின் கோழிக்கூடு பகுதியிலுள்ள Indian School of Commerce நிறுவனத்தின் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்கள். அந்தப் பாடல் மொழியைத் தாண்டி உலகில் உள்ள அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக அந்தப் பாடலின் முன் வரிசையில் ஆடிய ஷெரில் மிகுந்த கவனம்பெற்றார்.

ரசிகர்கள் அவரது போட்டோவை தங்களது வலைதளப் பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக வைத்தும், ஓவியா ஆர்மி போல் ஷெரில் ஆர்மி என்று ஆரம்பித்தும் அவரைப் புகழ்பெறச் செய்தனர். அந்தப் பாடல் தந்த வரவேற்பால் சினிமாவில் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடலின் லிரிக்கல் வீடியோவில் மட்டும் ஒரு காட்சியில் சொடக்கு போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அவர் இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். There is no goodbye என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த இசை ஆல்பத்துக்கு மலையாளத்தில் பல படங்களுக்கும், சென்னையில் ஒரு நாள் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்த மெஜ்ஜோ ஜோசப் இசையமைத்திருக்கிறார். ஷ்யாம் குமார் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தை ஒய்ட்வே புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜிமிக்கி கம்மல் பாடலுக்குப் பிறகு ஷெரில் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த இசை ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon