மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

வாட்ஸப் வடிவேலு: நாளை காதலர் தினம்!

வாட்ஸப் வடிவேலு: நாளை காதலர் தினம்!

காதலர் தினம் கொண்டாடுறது தப்பில்லைடா. ஆனா, ஒவ்வொரு வருஷமும் ஒருத்தரோட கொண்டாடுறீங்களே... அதுதான்டா மன்னிக்க முடியாத தப்பு.

இந்த காதலர் தினத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புரொப்போசல் வரும்னு சீரியஸாவே பல ஜோதிடர்களும், காமெடியா ஜோதிடம் சொல்லி வாட்ஸ்அப்லயும் வந்துகிட்டே இருக்கு.

1. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு கல்யாணத்தில் முடியும் என்பதால் புறம் சிரம் கரம் நீட்டாதீர்கள். லவ்வே பண்ண வேண்டாம்.

2. ரிஷப ராசி நேயர்கள் தங்களது காதல் கதையை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. மீறி சொன்னால் ஆப்பு வைப்பார்கள்.

3. மிதுன ராசி நேயர்கள் மீது எந்நேரத்திலும் லவ் அம்பு விட்டு போர் தொடுக்கலாம்.

4. கடக ராசி நேயர்கள் தாராளமாக லவ்பீக வாழ்க்கையில் இறங்கி ஈடுபடலாம். இந்தாண்டுக்குள் உங்கள் ஆளுடன் திருமணமும் நடக்கும்.

5. சிம்ம ராசி நேயர்கள் அக்டோபர் மாதம் வரை சிங்கம் சிங்கிளாகதான் இருக்கும். அதன்பிறகு காதல் பூக்கலாம். பூக்காமலும் போகலாம்.

6. கன்னி ராசி நேயர்கள் எந்நேரமும் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே கல்யாணம் முடிந்தவர்களின் வீட்டில் குவா குவா சத்தம் விரைவிலேயே கேட்கும்.

7. துலாம் ராசி நேயர்கள் யாரைவாது லவ்விக் கொண்டிருந்தால் தயவுசெய்து இப்போது புரொப்போஸ் செய்ய வேண்டாம். 2018ஆம் ஆண்டு அக்டோபருக்கு மேல் லவ்பீகத்தில் ஈடுபடலாம்.

8. விருச்சிக ராசி அன்பர்கள் தயவுசெய்து நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்க்கலாம். காதல், கீதல் என நேரத்தை வீணாக்க வேண்டாம்.

9. தனுசு ராசி நேயர்களுக்குக் குருவே துணை இருக்கிறார் என்பதால், எத்தனை இடத்தில் வேண்டுமானாலும் அப்ளிகேஷன் போடலாம். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களும்கூட உங்களை லவ்வும்.

10. மகர ராசி நேயர்களுக்குக் காதல் சரிவராது. அம்மா அப்பா பார்த்து கட்டி வைப்பவரையே மணந்து கொள்ளுங்கள்.

11. கும்ப ராசி நேயர்களுக்கு இந்தாண்டு இறுதிக்குள் லவ்பீக வாழ்க்கையில் குதிக்க நூறு சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது.

12. மீன ராசிக்காரர்கள் தயவுசெய்து இந்த ஒரு வருடம் மட்டும் காத்திருங்கள். அடுத்த ஆண்டு நிச்சயமாக காதல் அம்பு உங்கள்மீது பாயும்.

இங்கே காதலர் தினம் கொண்டாடிட்டு இருக்கற முக்காவாசி பேரு ஏப்ரல் மாசம் பொறந்தா புள்ளைக்கு காலேஜ் பீஸ் கட்டணும்மேனு கவலைப்பட்டுட்டு இருக்குற நல்லவங்கதான். அது ஒருபக்கம் தீவிரமா போய்கிட்டு இருக்கு. நமக்கு எதுக்கு வம்பு. ஒருவனுக்கு ஒருத்தியெல்லாம் மலையேறிப்போன காலம் மாதிரி, காதலித்தவரையே கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறது கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிக்கிட்டு வருது. எது எப்படியோ, ஏர்போர்ட்ல பேர் எழுதி கைல போர்டு வெச்சுக்கிட்டு நிக்கிற மாதிரி நின்னாதான் உண்டு.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon