மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

சென்னை: கத்தியுடன் திரிந்த சிறுவர்கள் கைது!

சென்னை: கத்தியுடன் திரிந்த சிறுவர்கள் கைது!

சென்னையில் கத்தியுடன் திரிந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, ஒலிம்பியா பில்டிங் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் ஒரே வாகனத்தில் வந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது மெக்கானிக் வேலை பார்ப்பதாகக் கூறியுள்ளனர். போலீஸார் வாகனத்தின் ஆவணங்கள் குறித்து விசாரித்தபோது, அவர்களிடம் ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீஸார் அவர்களைச் சோதனை செய்தபோது அவர்களிடம் ஒன்றரை அடி நீளக் கத்தி ஒன்றும் 14 செல்போன்களும் இருந்தன. இதைத் தொடர்ந்து, அவர்களை பல்லாவரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் விருகம்பாக்கம் மீனாட்சியம்மன் நகரைச்சேர்ந்த ஹரீஷ் (19), கோவூரைச் சேர்ந்த ஆகாஷ் (20), மற்ற இருவர் சிறுவர்கள் என்றும், நான்கு பேரும் சேர்ந்து பல்லாவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் தெரியவந்தது. மேலும், ஒரே இரவில் 14 செல்போன்களை அவர்கள் பறித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி ஹரீஷ், ஆகாஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon