மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

சினிமா என்ட்ரி: சத்யராஜ் மகள் மறுப்பு!

சினிமா என்ட்ரி: சத்யராஜ் மகள் மறுப்பு!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சினிமாவில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை அவர் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னையிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். திரைத் துறையைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் நடிக்கவருவது அதிகரித்துவரும் நிலையில் சத்யராஜின் மகளான திவ்யாவும் நடிக்க ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் இதை மறுத்து அவர் விளக்கமளித்துள்ளார். “நான் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக வெளியாகிய தகவல்களில் சிறிதும் உண்மையில்லை. நான் கடந்த ஏழு ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறேன். மேலும், ஊட்டச்சத்து பிரிவில் முனைவர் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். சினிமாமீது எனக்கு அதீத மரியாதை இருக்கிறது. திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதில்லை. ஊட்டச்சத்து சம்பந்தமான ஓர் ஆவணப்படத்தில் மட்டும் நடித்திருக்கிறேன். ஆனால், அது திரைப்படமல்ல!” என்று திவ்யா கூறியுள்ளார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon