மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்சே மீண்டும் வர வேண்டும் என பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி, 340 இடங்களில் 233 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தற்போதைய அதிபர் சிறீசேனாவின் கட்சி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி தோல்வியடைந்த நிலையில், தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது அந்நாட்டு அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சிங்களர்கள் மீண்டும் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியதாகவே இது கருதப்படுகிறது. இந்த நிலையில், ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராக வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை அரசியலில் ராஜபக்சே மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ராஜபக்சே விரைவில் இலங்கையின் அதிபராக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்குக் கடந்த 2014ஆம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon