மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

மறுவாழ்வு இல்லமாக மாறவுள்ள சிறைகள்!

மறுவாழ்வு இல்லமாக மாறவுள்ள சிறைகள்!

தெலங்கானா மாநிலத்தில் மூடப்பட்ட கிளைச் சிறைகளை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களுக்கான மறுவாழ்வு இல்லமாக மாற்ற அம்மாநில சிறைத் துறை முடிவு செய்துள்ளது.

ஆண்டுக்கு 10 சதவிகிதக் குற்றங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தெலங்கானா அரசு ஈடுபட்டு வருகிறது. கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பயிற்சி அளிப்பது போன்ற தொடர் நடவடிக்கைகளால், குற்றமும், குற்றவாளிகளும் குறைந்து வருவதால், சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக குறைவான கைதிகளே அங்கு இருந்ததால் சுமார் 14 கிளைச் சிறைகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு இறுதியில் மேலும், நான்கு கிளைச் சிறைகளை மூட சிறைத் துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், மூடப்பட்ட சிறைகளை ஆதரவற்றோர், கைவிடப்பட்ட பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான இல்லமாக மாற்றச் சிறைத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைத் துறை டி.ஜி.பி வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களைப் பணிக்கு அமர்த்தி, ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களைக்கொண்டு வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்க அம்மாநில சிறைத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon