மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 அக் 2019

தமிழில் கவனம் செலுத்தும் அஞ்சு குரியன்

தமிழில் கவனம் செலுத்தும் அஞ்சு குரியன்

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மலையாள நடிகை அஞ்சு குரியன் தற்போது கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் இயக்கும் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் நேரம், பிரேமம், சென்னை 2 சிங்கப்பூர் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றார் நடிகை அஞ்சு குரியன். தற்போது ரொமான்டிக் காமெடி திரைப்படமாக உருவாகிவரும் படத்தில் சந்திரனுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த விஜயராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகரும், பிரபல மலையாளத் தொலைக்காட்சி ஒன்றில் ‘Dance 4 Dance’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆதில் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஈரோடு மகேஷ், குரேஷி, ஈஸ்வர ரகுநாதன், நிம்மி இமானுவேல் உட்பட பலரும் நடிக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார். கிரிநந்த் இசையமைக்க, ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆலன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon