மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 13 நவ 2019

மின்வாரிய ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!

மின்வாரிய ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!

மின்வாரியத் தொழிலாளர் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வரும் 15ஆம் தேதி மீண்டும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு 26 மாதங்களாக வழங்கப்படாமல் தாமதமாகி வருவதாகக் கூறி, மின்வாரிய ஊழியர்கள் வரும் 16ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், நேற்று (பிப்ரவரி 12) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மின்வாரிய ஊழியர்கள் 2.57 காரணி ஊதிய உயர்வு கோரிய நிலையில், அரசு தரப்பில் 2.40 காரணி ஊதிய உயர்வு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, வரும் 15ஆம் தேதி மீண்டும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தொழிலாளர்நலத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon