மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

வறண்டு கிடக்கும் திராட்சை சந்தை!

வறண்டு கிடக்கும் திராட்சை சந்தை!

திராட்சை சந்தையில் சென்ற வருடத்தைவிடத் திராட்சை வரத்து குறைந்துள்ளதாக சர்வதேச அளவில் காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான லூபா ஃப்ரெஷின் நிறுவனர் லூசியன் டி விட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் திராட்சையின் வரத்து அதிகம் இல்லாததால் விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 11 முதல் 12.50 யூரோ வரையில் இருந்த விதையில்லா பச்சை திராட்சையின் விலை 11 முதல் 12 யூரோவாகக் குறைந்துள்ளது. பெரு நாட்டிலிருந்து இறக்குமதியாகும் திராட்சை ஜனவரி மாதத்தில் மிக அதிக அளவில் 22 யூரோவாகவும், தற்போது 15 முதல் 16 யூரோவாகவும் குறைந்துள்ளது.

இதுகுறித்து லூபா ஃப்ரெஷின் நிறுவனரான லூசியன் டி விட் பேசுகையில், “வறட்சி காரணமாக தென்னாப்பிரிக்கா நாட்டிலிருந்து குறைவான அளவிலேயே திராட்சைகள் வந்துள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட திராட்சை நல்ல வகையாக இருந்தாலும் குறைவான அளவிலேயே வந்துள்ளது. அதிலும் பச்சை திராட்சை வரத்து அரவே இல்லை. தென்னாப்பிரிக்கத் திராட்சைகளுக்கு அதிக விலையும், இந்திய சில்லியன் திராட்சைகளுக்குக் குறைந்த விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் அதிக வரத்து இருந்ததற்கு நேரெதிரான நிலை தற்போது சந்தையில் நிலவுகிறது” என்கிறார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon