மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

அட்வைஸ் செய்த மீரா

அட்வைஸ் செய்த மீரா

ஆபாச கமெண்ட்டைப் பதிவிட்ட ரசிகருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் நடிகை மீரா வாசுதேவன்.

தமிழில் உன்னைச் சரணடைந்தேன், ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மீரா வாசுதேவன். இவர் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வாலை கடந்த 2005ஆம் ஆண்டு மணந்தார். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் மலையாள நடிகர் அனிஷ் ஜான் என்பவரை மணந்தார். தற்போது அவரை விட்டும் பிரிந்து வாழ்கிறார் மீரா வாசுதேவன்.

குடும்பப் பிரச்சினையால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த மீரா, கடந்த ஆண்டு சக்கர மாவின் கொம்பத்து என்ற மலையாளப் படத்தில் நடித்தார். தற்போது தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது தகவல் பரிமாறிவரும் மீரா புகைப்படங்களையும் வெளியிடுவார்.

இந்த நிலையில் விமல்குமார் என்ற இளைஞர் அடிக்கடி மீராவின் புகைப்படம் அருகில் ஆபாச கமெண்ட் எழுதி அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவந்தார். தற்போது அந்த இளைஞரின் ஆபாச கமெண்ட்களை செல்போனில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டு அறிவுரை வழங்கியுள்ளார் மீரா. “ஆபாச கமெண்ட்களை வெளியிடுவதற்கு இளைஞர் வெட்கப்பட வேண்டும். தேவையற்ற இதுபோன்ற கமெண்ட்களைப் பகிர்வதற்குப் பதிலாக அந்த இளைஞர் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார் மீரா. இதையடுத்து அந்த இளைஞர் தன் பதிவை நீக்கியுள்ளார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon