மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பு!

வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கான கடன் தொகையில் ரூ.50,000 வரை தள்ளுபடி செய்யவிருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கலின்போது பேசுகையில், “ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கான கடன் தொகையில் ரூ.50,000 வரை தள்ளுபடி செய்யப்படவுள்ளது. இதன்மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.8,000 கோடி வரையிலான தொகை சிறு குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காகச் செலவிடப்படுகிறது. விவசாயிகளின் தகுதி அடிப்படையில் இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்றார்.

முதலமைச்சரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்றும் விவசாயிகளின் முழுக்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் சட்டமன்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ், ரமேஷ்வர் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் தொடர்ந்து பேசிய வசுந்தரா ராஜே, “80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்” என்றும், “மாநில நெடுஞ்சாலைகளில் உடன் பயணம் மேற்கொள்பவர் பாதி கட்டணம் செலுத்தினால் போதுமானது” என்றும் தெரிவித்தார். அங்கன்வாடி தொழிலாளர்களுக்கென மதிப்பூதியம் உயர்வு, ராம்நிவாஸ் தோட்டத்திலிருந்து டெல்லி செல்வதற்கான போக்குவரத்து மேம்பாடு, மாட்டுத் தொழுவங்களில் உயிரி எரிவாயு அமைத்தல் போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon