மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

பெட்ரோல் - டீசல்: உயரும் வரி வசூல்!

பெட்ரோல் - டீசல்: உயரும் வரி வசூல்!

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் வரிகள் வாயிலாக மத்திய அரசானது ஐந்து ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் பொருட்கள் மீதான வரி வாயிலாக அரசின் வருவாய் 2014-15 நிதியாண்டில் ரூ.1.05 லட்சம் கோடியிலிருந்து 2015-16 நிதியாண்டில் ரூ.2.57 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதற்கு முந்தைய 2013-14 நிதியாண்டில் பெட்ரோலியம் பொருட்கள், ஆயில் மற்றும் உயவுப் பொருட்கள் மீதான வரி வருவாய் ரூ.88,600 கோடியாக இருந்தது. இவ்வாறு பெட்ரோலியம் பொருட்கள் வாயிலாகக் கிடைக்கும் அதிக வருவாயைக் கொண்டு, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதாகவும், நிதிச் செலவுகளைக் கையாள உதவியாக இருப்பதாகவும் மத்திய அரசு கூறுகிறது.

இதுபற்றி, எரிபொருள் மீது விதிக்கப்படும் வரி வாயிலாக அரசுக்குக் கிடைக்கும் வருவாயானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிச் செலவினங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறும் அரசு அதிகாரி ஒருவர், மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி விதித்து வருவாய் ஈட்டுவதைச் சுட்டிக் காட்டினார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு சாலை உள்கட்டமைப்பு வரியாக லிட்டருக்கு ரூ.8 விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இதன் மூலம் அரசுக்கு ரூ.1,13,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, பெட்ரோல் விலை சுமையைக் குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரியை ரூ.2 குறைப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon