மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சசிகலா போட்டோ இல்லையா?: அப்டேட் குமாரு

சசிகலா போட்டோ இல்லையா?: அப்டேட் குமாரு

ஜெயலலிதா போட்டோ திறக்குறதுக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கிறாங்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. ஆனா இங்க ஒருத்தர் ஆதரவு தெரிவிக்கிறாரா எதிர்க்கிறாரான்னு தெரியல. “குற்றவாளிகளை விலக்காம அவங்களும் சமூகத்தின் ஒரு அங்கம் தான்னு சட்டசபையிலயே முன்னுரிமை கொடுத்து படம் திறக்குற சமூக நிதி சிந்தனையுள்ள அரசு”ன்னு சொல்றாரு. அந்தம்மாவை சொல்லி இவங்களை கலாய்க்குறதா இல்ல இவங்களை காண்பிச்சு அந்தம்மாவை கலாய்க்குறதான்னே தெரியல. சட்டமன்றத்தில் தனி ஒருவராக வந்து சிங்கம் போல் கர்ஜித்தவர் ஜெயலலிதான்னு பன்னீர் செல்வம் வாசிச்சு முடிச்சுருக்காரு. இவர் தான யூ டர்ன் போட்டு தருமயுத்தம் நடத்துனதுன்னு ஞாபகமா கேள்வி கேட்குறாங்க. இந்த அக்கப்போர் போய்கிட்டு இருக்குறதால மாதவன் மேட்டரை நம்மாளுங்க மன்னிச்சு விட்டுட்டாங்க. அங்கங்க சிலர் கொளுத்திப்போடவும் செஞ்சுருக்காங்க. அதை கீழே பாருங்க.

@HAJAMYDEENNKS

உலகில் அதிகமாக அழிக்கப்பட்ட ஹிஸ்டரி

ப்ரவுசிங் ஹிஸ்டரியாகத்தான் இருக்கும்...!

@CreativeTwitz

ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகி பதவிகளை அளிக்க பேரம்

// இவர் தான் சிஸ்டம மாத்தனும்னு கிளம்புனதா

@vishnut87

டிடிவி தினகரன் சி எம் ஆகி இருந்தா சசிகலா போட்டோவும் திறந்திருப்பாரு.......க்ரேட் எஸ்கேப்

@Saran_Twitzz

ஒரு குழந்தைக்கு தகப்பனே ஆனாலும்

இன்னும் நம்மள ஒரு குழந்தையா

பார்ப்பது தாய் மட்டுமே!!

@வாசுகி பாஸ்கர்

கடவுளின் கோபத்தால் திராவிட இயக்கம் விரைவில் அழியும் -எஸ்வி சேகர்

Galaxy, interstellar, milky way, மூளையின் செயல்திறன், அது இதுன்னு படிச்சி இதையெல்லாம் “கடவுளாடா செய்றார்?” ன்னு யோசிச்சிட்டு இருந்தா, கேவலம் கட்சியை கலைக்குற் வேலையையவா கடவுள் செஞ்சிட்டு இருக்கார். சில்லி god

@ungalhabeeb

தீபா கணவர் மாதவன் தான் தம்மை வருமான வரித்துறை அதிகாரியாக தீபா வீட்டில் நடிக்க வைத்தார். போலி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்

மாதவன்:சார் நாங்க திருடன் போலிஸ் விளையாடிட்டு இருந்தோம் நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க....

@Boopathy Murugesh

காதல் தோல்விக்குலாம் தினமும் தம் அடிக்காதீங்கடா..

உலகத்துல 300 கோடி பொண்ணு இருக்கு.. நுரையீரல் ஒன்னு தான் இருக்கு..

@skpkaruna

கே.பாலசந்தரின் கவிதாலயா சொத்துக்கள் 1.40 கோடி கடனுக்காக பொது ஏலத்துக்கு வந்துள்ளது. சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் இதைக் காப்பாற்றாமல், தமிழகத்தைக் காக்க வருவது முரணாக இருக்கும்தானே?

@HAJAMYDEENNKS

எடிட் ஆப்சன் கொடுக்காமல் "செய்வதை திருந்த செய்" என்ற வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தையும்,எடிட் ஆப்சன் கொடுத்து " தவறை திருத்திக்கொள் " என்ற வாழ்வின் வழிமுறையையும் ஒரு சேர சொல்லிக்கொடுக்கிறது ட்விட்டரும் பேஸ்புக்கும்...!

@SKtwtz

இருந்தபோது சுவாசிக்க வைத்தன

இறந்த பின்னும் வாசிக்க வைத்தன..

காகிதமான மரங்கள்....

@HAJAMYDEENNKS

கன்டிசன்ஸ் அப்ளை என வரும் விளம்பரங்கள் கன்டிசனாக புறக்கணிக்கப்பட வேண்டியவை...!

@கருப்பு கருணா

என் படங்களைப்போலவே எனது அரசியலும் வித்தியாசமாகவே இருக்கும் : கமல்ஹாசன்

அபிராமி..! அபிராமி..!!

@வாசுகி பாஸ்கர்

குற்றவாளிகளை இந்த பொது சமூகத்தில் இருந்து விலக்காமல், அவர்களையும் அங்கீகரித்து சட்டசபையில் இன்று குற்றவாளியான ஜெயாவின் திருவுருவ படத்தை திறந்து, இது சமூகநீதி மண் என்று நிரூபித்த அமைச்சரவைக்கு நன்றிகளும், முத்தங்களும்

@VKtwitz_Vicky

சட்டமன்றத்தில் தனி ஒருவராக வந்து சிங்கம் போல் கர்ஜித்தவர் ஜெயலலிதா- ஜெ. உருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பேச்சு

ஆன மெரினால யு டேர்ன் போட்டு டேபிள உடைச்சது நீங்க தான??

@ungalhabeeb

வருமானம் சோப்பு மாதிரி ஒரே அளவுலதான் இருக்கு..

செலவு தான் அதுல வர நுறை மாதிரி வந்திட்டே இருக்கு.....

@mohanramko

சாதாரண காய்ச்சலையும்

'குத்தி' காட்டுகிறார்

மருத்துவர்

@Thaadikkaran

கடையில் எது இல்லையோ அதுவே வேண்டும் என அடம்பிடிப்பதே குழந்தையின் டிசைன்..!!

@mohanramko

புயல், சுனாமி, வெள்ளம் , வறட்சினு ஒவ்வொரு பருவமா பார்க்கும்போது 'நல்லதுக்கே காலம் இல்லை'னு தோணுது

@கருப்பு கருணா

குற்றவாளிகளெல்லாம் சேர்ந்து ஒரு குற்றவாளியின் படத்தைத்தானே திறந்துவைப்பார்கள். பின்னே குமண வள்ளல் படத்தையா திறக்க முடியும்..!

ஓவர் பனியும் ஓவர் பீலிங்கும் ஒடம்புக்கு ஆகாதுப்பா!

@MJ_twets

சரி TNPSC எக்ஸாம் எழுதியிருக்கியே பாஸ் ஆனா என்ன பண்ணுவ?

அரசு அதிகாரி ஆகிடுவேன், கிர் கிர்

சரி பெயிலானா ?

அரசியல்ல எறங்கிடுவேன், கிர் கிர்

@HAJAMYDEENNKS

வடிவேல், சந்தானம் இடத்தை பிடித்தார் மாதவன்..

உதவி - ஜெ.தீபா !

@வாசுகி பாஸ்கர்

நான் சைவம் அல்ல, ஆனால் மாட்டுக்கறி உண்ண மாட்டேன், மாட்டுக்கறி உண்ணக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன் - கமலஹாசன்

நான் உயர்ந்த சாதியில் பிறந்தவன், ஆனால் எனக்கு சாதி பற்று கிடையாது, சாதி வெறி தப்புதான் - வாசுகி பாஸ்கர்

கோல்டு கவரிங் கருத்துக்கள்

@nilaavan

ஜெயலலிதா

அமைதி - எ.கா. : செருப்பு அணிந்து வரக்கூடாதுன்னு சொன்ன மருத்தவர பணி நீக்கம் செய்தது...

வளம் - எ.கா : வளர்ப்பு மகன் கல்யாணம் + அந்த நகை போட்டோ...

வளர்ச்சி - எ.கா : 2011ல் பதவி ஏற்கும் போது இருந்த 2.5 லட்சம் கோடி தமிழக கடன் 4.5 லட்சம் கோடியாக வளர்ச்சியடைந்தது..

@கருப்பு கருணா

ரஜினியின் நிறம்

காவி என்றால் அவருடன்

கூட்டணி இல்லை - கமல்

அந்த மனுசனே பரவால்ல வாத்யாரே.. இதுதான் என் நிறம்ன்னு தெளிவாச்சொல்லிட்டாரு. நீருதான் கொழப்பிட்டிருக்கீரு. உம்ம நிறம் என்ன..கருப்பா..சிவப்பா..நீலமா..காவியா..!

ஹேராம்ம்ம்ம்!

-லாக் ஆஃப்

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon