மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

மணிகார்னிகா: போராட்டம் வாபஸ்!

மணிகார்னிகா: போராட்டம் வாபஸ்!

பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடிப்பில் ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மணிகார்னிகா படத்துக்கு எதிரான போராட்டத்தை பிராமின் சாம்ராஜ் அமைப்பினர் வாபஸ் பெற்றனர்.

பாலிவுட் இயக்குநர் கிரிஷின் இயக்கத்தில் 'மணிகார்னிகா- தி குயின் ஆப் ஜான்சி' என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கங்கணா ரணாவத் ஜான்சி ராணியாக நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்ட்து வரும் இப்படம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதாபாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற எதிர்ப்பு எழுந்தது. ராணிக்கும் பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே காதல் ஏற்படுவதுபோலப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்தப் படத்தைத் திரையிடக் கூடாது என வலியுறுத்தி சர்வ பிராமின் மகாசபை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர். படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி அந்த அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர்.

இந்நிலையில், போராட்டக் குழுவினரைச் சந்தித்த படக் குழுவினர் படத்தில் ராணியின் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்படவில்லை என உறுதியளித்தனர். இதையடுத்து மணிகார்னிகா படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சர்வ பிராமின் மகாசபை அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon