மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கோல் அடிக்காத பார்சிலோனா!

கோல் அடிக்காத பார்சிலோனா!

லா லீகா தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கெட்டாஃபெ அணியுடன் கோல் அடிக்காமல் பார்சிலோனா அணி சமன் செய்தது.

லா லீகா தொடரில் இந்த சீசனில் இந்த போட்டியைத் தவிர பார்சிலோனா அணி விளையாடிய 22 போட்டிகளிலும் ஒரு கோலாவது அடித்துள்ளது. அதேபோல் தோல்விகளை சந்திக்காமல் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற கெட்டாஃபெ அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி சிறப்பாக விளையாடியது.

தொடக்கம் முதல் கடைசி வரை பார்சிலோனா அணி வீரர்களிடமே பந்து இருந்தது. சுமார் 80 சதவிகிதம் அவர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கோல் போடாமல் இருந்தாலும் சரி, பார்சிலோனா அணியை கோல் அடிக்க விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கெட்டாஃபெ அணி விளையாடியது. எனவே இரண்டு அணிகளும் தொடக்கம் முதல் ஒரு கோலும் அடிக்கவில்லை. மெஸ்சி கோல் அடிக்க முயற்சி செய்யும் போது சிறப்பாக அதனை தடுத்து விளையாடிய கெட்டாஃபெ அணி வீரர்கள் போட்டி சமனில் முடிய உதவினர்.

நேற்றைய போட்டியில் ஜெரார்டு பிக்யு வெளியேற்றம் செய்யப்பட்டார். அவர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ஒரு கோல் அடித்து போட்டியைச் சமன் செய்ய உதவினார். ஆனால் அவர் இந்த போட்டியில் இடம் பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போட்டி சமனில் முடிந்ததால் இந்த சீசனில் தோல்வியே சந்திக்காமல் 23 போட்டிகளில் விளையாடி உள்ள பார்சிலோனா அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியைத் தவிர்த்தால் , ரியல் மாட்ரிட் அணியின் சாதனை சமன் செய்ய முடியும். பிப்ரவரி 17இல் நடைபெறவிருக்கும் அடுத்த போட்டியில் பார்சிலோனா அணி எய்பேர் அணியை எதிர்கொள்கிறது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon